இந்தியா

பெண்ணின் மேல் உட்கார்ந்த பொலிஸ் அதிகாரி!

கான்பூரில் உள்ளூர் சூதாட்ட கும்பலை பிடிக்க முயற்சித்தபோது போலீசாருக்கும், பெண்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள துர்கதாஸ்பூர் என்ற கிராமத்தில் சிலர் சூதாட்டம் ஆடியதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திர படேல் அந்த கும்பலை பிடிக்க முயற்சித்துள்ளார்.

அப்போது, யாதவ் என்ற வாலிபரை பிடிக்க முயற்சித்தபோது யாதவின் குடும்பத்தாருக்கும், சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திர படேலுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் தள்ளுமுள்ளு மூண்டது. இந்த சலசலப்பின் போது சப் இன்ஸ்பெக்டர் யாதவின் மனைவியின் மீது அமர்ந்து இருப்பதும், அவரது சட்டை காலரை மனைவி ஆர்த்தி யாதவ் பிடித்து இருப்பதுமான வீடியோ காட்சி இணையத்தில் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், சப் இன்ஸ்பெக்டர் ஆர்த்தி யாதவை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் கான்பூரில் பூதாகரமாக வெடிக்கவே, எதிர்க்கட்சிகள் மாநில அரசை கடுமையாக விமர்சித்தனர்.

இதற்கிடையில், கான்பூர் தேஹாட் காவல்துறை கண்காணிப்பாளர் சவுத்ரி, மகேந்திர படேலை விசாரித்து வருவதாகவும், தற்காலிகமாக அவரை கான்பூர் காவல் பணியில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதகவும் தெரிவித்தார்.

மேலும், காவல்துறை தரப்பில் யாதவ் குடும்பத்தினர் வைத்துள்ள புகாரை மறுத்துள்ளனர். சம்பவத்தன்று யாதவ் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க முயற்சித்த போது, யாதவை மட்டும் கைது செய்ய அவரது குடும்பம் தடுத்ததாகவும், அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளினால் சப் இன்ஸ்பெக்டர் தவறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து கான்பூர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வரும் நிலையில், சப் இன்ஸ்பெக்டரின் வீடியோ வைரலாகி வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

ஒலிம்பிக் தடகள வீரர்களுக்கு ரூ.5 லட்சம் : முதல்வர் அறிவிப்பு

divya divya

ஸ்டாலின் மருமகன், நண்பர்கள் இல்லங்களில் வருமான வரித்துறை சோதனை

Pagetamil

ஆட்சியை இழந்தாலும், மக்களின் இதயங்களை நாம் இழக்கவில்லை : ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!