உலகம்

பாகிஸ்தான் விபத்தில் 30 பேர் பலி!

பாகிஸ்தானில் பேருந்து – பாரவூர்தி நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் 33 பேர் உடல் நசுங்கி பலியாயினர். 40 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கிழக்குப் பகுதியில் உள்ள சியான்கோட்டில் இருந்து ராஜன்பூருக்கு பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பக்ரீத் விடுமுறையை முன்னிட்டு இந்த பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

சியால்கோட் என்ற நகரை தாண்டி, மத்திய பாகிஸ்தானின் பரபரப்பான தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த ஒரு பாரவூர்தி மீது பேருந்து மோதியது.

மோதிய வேகத்தில் பேருந்தின் முன்பகுதி நொறுங்கியது. இதில், பேருந்தில் பயணம் செய்த 30 பேர் உடல் நசுங்கி பலியாகினர். 40 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

பொதுவான வேலைகளை விடச் சற்று வித்தியாசமான வேலைகள் இந்த உலகில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?

divya divya

சீனாவில் தற்காப்பு கலைகள் கற்று தரும் பள்ளியில் தீவிபத்து- 18 சிறுவர்கள் உடல் கருகி பலி!

divya divya

ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் நிலநடுக்கம்; மீண்டும் நைராகோங்கோ எரிமலை வெடிக்கும் என மக்கள் பீதி!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!