எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இன்று (19) நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கிடையிலான கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




