டெவோன் நீர் வீழ்ச்சியில் விழுந்த யுவதியை தேடும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Date:

டெவோன் நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமற் போயுள்ள 19 வயது யுவதியை தேடும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திம்புளை – பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பத்தனை டெவோன் நீர் வீழ்ச்சியை தனது மூன்று நண்பிகளுடன் பார்வையிட சென்ற போது நேற்று (18) மாலை குறித்த யுவதி நீர் வீழ்ச்சியின் உச்சியில் இருந்து கால் தடுமாறி விழுந்து காணாமல் போனார்.

இந்த நிலையில் இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் மீட்பு பணிகள் இன்று (19) காலை முதல் இடம்பெற்று வந்த நிலையில் மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக திம்புளை – பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு நீர் வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்து காணாமல் போயுள்ள யுவதி லிந்துலை லென்தோமஸ் பகுதியில் வசித்த 19 வயதான மணி பவித்ரா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர் வீழ்ச்சியின் அடி பகுதியில் பாரிய கற்பாறைகள் உள்ளதாலும், நீர் வீழ்ச்சியில் அதிகளவில் நீர் விழுவதனை கருத்தில் கொண்டு மேற்படி யுவதியை தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

க.கிஷாந்தன்-

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்