ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசி; சுத்திகரிப்பு பணியாளர்கள் புறக்கணிப்பு: வவுனியா விசித்திரம்!

Date:

வவுனியா நகரசபையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்களிற்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதில் அரசும், சுகாதாரத்துறையும் பாராமுகமாக இருப்பதாக வவுனியா நகரசபைஉறுப்பினரும், முன்னாள் உபநகரபிதாவுமான க.சந்திரகுலசிங்கம்
தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

வவுனியா நகரசபையில் பணிபுரியும் சுகாதார ஊழியர்களிற்கு இதுவரை கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை. வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், மற்றும் இராணுவம் பொலிசார் உட்பட பலருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் முன்களப்பணியாளர்களாக செயற்ப்பட்டு வருகின்ற எமது சுகாதார ஊழியர்களிற்கு இதுவரை தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை. அண்மையில் இராணுவத்தால் ஆயிரம் தடுப்பூசிகள் வவுனியாவிற்கு வழங்கப்பட்ட நிலையில் அதிலும் எமது ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். குறித்த விடயத்தில் மாவட்ட சுகாதாரத்துறையும், அரசாங்கமும் பாராமுகத்துடன், அலட்சியமாக செயற்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக வவுனியா நகரின் சுகாதாரத்தன்மையை பேணி தூய்மைப்படுத்தும் பணியினை எமது ஊழியர்களே முன்னெடுத்துவருகின்றனர். ஏற்கனவே கடந்தமாதம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் அங்கு பணியாற்றும் 16 ஊழியர்களிற்கு கொரோனா வைரஸ்தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. மீளவும் இவ்வாறு தொற்று ஏற்ப்படும் சந்தர்ப்பத்தில் அது பரவலடைந்து நகர் முழுவதும் பாரிய சமூகத்தொற்றாக மாறும் அபாயநிலை காணப்படுகின்றது.

எனவே குறித்த விடயத்தினை கருத்தில் கொண்டு வவுனியா நகரசபை சுகாதார ஊழியர்களிற்கு விரைவாக தடுப்பூசிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசும், சுகாதாரத்துறையினரும் முன்னெடுப்பதுடன், பொதுமக்களிற்கான தடுப்பூசிகளையும் விரைவில் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்