30.7 C
Jaffna
March 29, 2024
இலங்கை

கொரோனாவுடன் கைகோர்த்து குழந்தைகளை தாக்கும் புதிய அபாயம்: யாழிலும் பாதிப்பு!

இலங்கையில் 34 குழந்தைகளுக்கு மல்டிபிள் ஸ்களீரோசிஸ் எனப்படும் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்புலேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவர் நளின் கிதுல்வத்த தெரிவித்துள்ளார்ஃ

கொரோனா தொற்றுள்ள குழந்தைகள் மத்தியில் இந்த நோய் பரவுகிறது என்று அவர் கூறினார்.

இவர்களில், 21 குழந்தைகள் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் ஐந்து பேர் தற்போது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், காலி கராபிட்டி மருத்துவமனையில் இருந்து ஆறு குழந்தைகளும், கண்டி மருத்துவமனையில் இருந்து நான்கு குழந்தைகளும் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார், யாழ்ப்பாணம், தியதலாவ, குருநாகல் மற்றும் பதுளை மருத்துவமனைகளிலிருந்தும் இந்த தொற்றுடன் குழந்தைகள் பதிவாகியுள்ளனர்.

இந்த நோய் கொரோனா தொற்றுடன் தொடர்புடையது. கொரோனா தொற்று ஏற்பட்டு தொடங்கிய இரண்டு முதல் ஆறு வாரங்களுக்கு இடையில் இந்த நோய் ஏற்படக்கூடும் என்று அவர் மேலும் கூறினார்..

வயிற்று வலி, தோல் அரிப்பு, வயிற்றுப்போக்கு மற்றும் கண்கள் சிவப்பது ஆகியவை இந்த
நோய்த்தொற்றின் முக்கிய அறிகுறிகளாக இருக்கும். இந்த நோய் குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருப்பது முக்கியம் என்று நளின் கித்துல்வத்த தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

Leave a Comment