கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள முன்னிலை சோசலிச கட்சியின் செயற்பாட்டாளர் துமிந்த நாகமுவவின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு ஜூலை 19 திங்கள் அன்று விசாரிக்கப்படும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தது.
இந்த உத்தரவை இன்று காலை இரண்டு உறுப்பினர்களை கொண்ட நீதிபதிகள் குழாம் அறிவித்தது.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, கைது செய்யப்பட்ட துமிந்த நாகமுவ, கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




