தோள்பட்டை காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து இலங்கையின் தொடக்க வீரர் குசல் பெரேரா விலகியுள்ளார்.
6 வாரங்களிற்கு அவர் ஓய்வில் இருப்பார் என தெரிகிறது.
அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்ல அணியின் உயிர் குமிழியை மீறியதால் இடைநீக்கப்பட்டுள்ள நிலையில், குசலின் விலகல் புதிய விக்கெட் கீப்பரை தேட வேண்டிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
அதே போல் டிக்வெல்லா குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலகா ஆகியோர் இல்லாத நிலையில், குசல் பெரேராவின் விலகல் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தையும் பெரிதும் பாதிக்கும்.




