ஆன்மிகம்

கண் திருஷ்டி, செய்வினை பாதிப்புகளை போக்கும் மந்திரம்!

நம்மை அறியாமல் நம்மை துஷ்ட சக்திகள் பிடிக்கின்றன. அத்தகைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் முனீஸ்வரரை நாம் வழிபடுவதால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

முற்காலத்தில் இந்தியாவில் கிராமங்களில் அதிகமாக இருந்தன அந்த கிராமங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான குல தெய்வத்தை வழிபடும் வழக்கம் இருந்தது அதில் தங்களின் குடும்ப கஷ்டங்கள் தீரும் தங்களுக்கு சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கவும் அதிகம் மக்களால் வழிபடப்படும் ஒரு தெய்வமாக முனீஸ்வரன் இருந்து வருகிறார். தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் காவல் தெய்வமாக வழிபடப்படுகிறார் முனீஸ்வரன். தீய சக்திகளை அழிக்கும் சக்தி படைத்த முனீஸ்வரனின் இந்த மூல மந்திரத்தை துதிப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

முனீஸ்வரன் மூல மந்திரம்

ஓம் ஹம் ஜடா மகுடதராய
உக்ர ரூபாய துஷ்ட மர்தனாய
சத்ரு சம்ஹாரனாய ஜடா
முனீஸ்வராய நமஹ

மக்கள் பெரும்பாலானோரின் காவல் தெய்வமாக இருக்கும் முனீஸ்வரருக்குரிய மூல மந்திரம் இது. இந்த துதியை தினமும் காலை 3 முறை துதித்து வெளியே செல்வது நல்லது. செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அருகிலுள்ள கிராம கோயிலுக்கு சென்று முன்பாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, இத்துதியை 27 முறை அல்லது 108 முறை துதித்தால் உங்களுக்கு எதிரிகளால் செய்யப்பட்ட செய்வினை ஏவல்களின் கடுமையான பாதிப்புகள் நீங்கும். வீட்டில் அண்டியிருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் வெளியேறும். உடல் நலக்குறைவு, மனகுழப்ப நிலை நீங்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும். ஊரில் முனீஸ்வரர் கோயில் இல்லாதவர்கள் வீட்டிலேயே முனீஸ்வரை மனதில் நினைத்து இந்த மந்திரத்தை துதித்து வழிபடலாம்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

தை அமாவாசையின் நன்மைகள்

Pagetamil

இந்த ராசியினரை கணவனாக அடைந்த பெண்கள் கொடுத்து வைத்தவர்கள்!

divya divya

12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது : ராசிபலன் 17.04.2021

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!