கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார்.
தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி – நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் நேற்று (9) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று காலை தொழில் புரிந்து கொண்டிருந்த நிலையில் இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
23 வயதுடைய சிவகுருநாதன் சாரங்கன் என்ற இளைஞனே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்




