பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2ஆம் குறுக்குதெரு, சின்ன ஒழுங்கை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனையில் 23 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்த, அந்த பகுதியில் நடமாட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை கொட்டடி பகுதியில் அண்மையில் எழுமாற்றாக நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
அவரது வீட்டில் சில தினங்களின் முன்னர் மரண சடங்கொன்றும் நிகழ்ந்திருந்தது.
இதையடுத்து, மரணச்சடங்கில் கலந்து கொண்ட அயலவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்களில் இன்று 60 பேருக்கு அன்ரிஜன் சோதனை செய்யப்பட்டது. இதில் 23 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அது தவிர, 72 பேருக்கு பிசிஆர் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த பகுதியில் தொற்று பரவாமலிருக்க, உடனடியாக 2ஆம் குறுக்குதெருவின் சின்ன ஒழுங்கை பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.



