சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் அஞ்சலோ மத்யூஸ்!

Date:

இலங்கை கிரிக்கெட்  அணியின் மூத்தவீரர் அஞ்சலோ மத்யூஸ், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த விவகாரம் குறித்து விவாதித்து வருவதாகவும், எதிர்வரும் வாரங்களில் தனது முடிவை தெரிவிப்பதாகவும் மத்யூஸ் (34) இலங்கை கிரிக்கெட்டுக்கு தெரிவித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இளம் அணியை கட்டியெழுப்புவதென தேர்வாளர்கள் முடிவு செய்த தை தொடர்ந்து, அஞ்சலோ மத்யூஸ் வரையறுக்கப்பட்ட ஓவர் ஆட்டங்களுக்கான அணியில் இணைக்கப்படவில்லை.

புதிய ஒப்பந்த முறைமை தொடர்பாக மத்யூஸ் மற்றும் பல மூத்த கிரிக்கெட் வீரர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். எனினும், நேற்றிரவு ஒப்பந்தங்களில் கையெழுத்திட ஒப்புக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்