கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் உற்பத்தியுடன் ஏனைய உணவு உற்பத்தியிலும் மக்கள் ஈடுபடுவதால் உணவு தட்டுப்பாட்டை தவிர்க்க முடியும் – கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்!

Date:

கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் உற்பத்தியுடன் ஏனைய உணவு உற்பத்தியிலும் மக்கள் ஈடுபடுவதால் உணவு தட்டுப்பாட்டை தவிர்க்க முடியும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கொவிட்ட தடுப்பூசி மற்றம் தொற்ற நிலவரம் தொடர்பான ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்க பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த உணவுகள் குறிப்பிட்ட சில காலத்துடன் முடிந்துவிடும் நிலை காணப்படுவதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் களஞ்சிய நிலை எவ்வாறு காணப்படுகின்றது என அரசாங்க அதிபரிடம் ஊடகவியலாளர் வினவினார். அதற்கு பதில்லளிக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிடுகையில்,

கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் நெல் உற்பத்தி செய்கின்ற மாவட்டமாக காணப்படுகின்றது. அந்த வகையில் விவசாயிகள் தமக்கு தேவையான உணவு பொருட்களை சேமித்து வைத்துள்ளார்கள். அதேவேளையில் அரிசியை பெற்றுக்கொள்ளக்கூடிய அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.

அதேவேளை ஏனைய உணவு உற்பத்தியிலும் மக்கள் ஈடுபட்டு வருகின்ற காரணத்தினால், ஓரளவு உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யக்கூடிய நிலை மாவட்டத்தில் இருக்கும் என்று நான் நம்புகின்றேன் எனவும் அரசாங்க அதிபர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் கடத்தல்காரருடன் நடிகைக்கு தொடர்பா?: தீவிர விசாரணை!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் மற்றும் நடிகை பியூமி ஹன்சமாலி...

மோகினியில் கவிழ்ந்த கிளி, வவுனியா வாசிகள்!

விடுமுறை அல்லாத காலத்தில் சிவனொளிபாதமலையில் தரிசனம் செய்ய வந்திருந்த ஒரு குழுவினரை...

நீண்டகாலத்தின் பின் ஒரே நிகழ்வில் கலந்து கொண்ட திலீப்- மஞ்சு வாரியார்

திலீப் மற்றும் மஞ்சு வாரியர் மலையாளிகளின் விருப்பமான நடிகர்கள். ஒரு காலத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்