இந்த ஆண்டின் கடந்த ஆறு மாதங்களில், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (என்சிபிஏ) சுமார் 4,000 முறைப்பாடுகள் வந்துள்ளதாக அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபத்திரண தெரிவித்தார்.
கடந்த 18 மாதங்களில் நாடு முழுவதும் 12,165 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் பதிவாகியுள்ளன.
“அந்த முறைப்பாடுகள் அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் எதிர்காலத்தில் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.
இதுபோன்ற விஷயங்களில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் உதவி தேவைப்படுபவர்கள் 1929 என்ற அவசர இலக்கத்தை அழைக்கலாம்.
கடந்த ஆறு மாதங்களில், சிறுவர் துன்புறுத்தல் குறித்த சுமார் 48,000 அழைப்புகள் எமக்கு கிடைத்தன” என்று அவர் கூறினார்.




