யூரோ 2020 கால்பந்து போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி இத்தாலி அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இங்கிலாந்தில் யூரோ 2020 கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் வெம்பிளே ஸ்டேடியத்தில் நடந்த அரையிறுதி போட்டி ஒன்றில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகள் மோதின.
இந்த போட்டியில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன. இதன்பின்னர் பெனால்டி அடிப்படையில் இத்தாலி அணி 4-2 என்ற புள்ளி கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதனை தொடர்ந்து இங்கிலாந்து அல்லது டென்மார்க் அணியுடன் இத்தாலி இறுதி போட்டியில் விளையாட உள்ளது. லண்டனில் இன்று நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் டென்மார்க் அணிகள் விளையாடுகின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1