தொழில்நுட்பம்

உங்கள் நம்பர் தெரியாமல் ஒருவருக்கு போன் செய்வது எப்படி?

உங்கள் தொலைபேசி எண் என்பது உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மட்டுமே இருக்க வேண்டிய ஒன்று. அது தவறானவர்கள் கைகளுக்குச் செல்லும்போது பல மோசடிகள் நிகழக்கூடும்.

இதனால் தேவையற்ற அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் போன்ற தொந்தரவுகளை நீங்கள் சந்திக்க நேரலாம். இதுபோன்ற சிக்கல்களிலிருந்து உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ள, உங்கள் Caller ID என்று சொல்லக்கூடிய அழைப்பாளர் ஐடியை மறைத்து வைக்க வேண்டும் மற்றும் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க உங்கள் தொலைபேசி எண்ணையும் மறைக்க வேண்டும் வேண்டும்.

ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு சாதனத்தில் உங்கள் எண்ணை மறைக்க பல வழிகள் உண்டு.

1. உங்கள் எண்ணை மறைக்க, நீங்கள் அழைக்க விரும்பும் தொலைபேசி எண்ணை அழைக்கும் முன் *67 என்ற எண்ணை டயல் செய்ய வேண்டும். உங்கள் தொடர்புகளில் சேமித்த ஒருவரிடமிருந்து உங்கள் எண்ணை மறைக்க விரும்பினால், நீங்கள் முதலில் *67 என டைப் செய்து அழைக்க விரும்பும் நபரின் எண்ணை டைப் செய்து அழைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, நீங்கள் அழைக்க விரும்பும் தொலைபேசி எண் 555-555-5555 என்றால் அதற்கு பதிலாக *67-555-555-5555 என்ற எண்ணை டயல் செய்ய வேண்டும்.

நீங்கள் இதைச் செய்த பிறகு, அழைப்பாளர் ID இல்லை, பிரைட் நம்பர், பிளாக் செய்யப்பட்டுள்ளது என்று தோன்றும். இதற்கு எந்த செலவும் ஆகாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் தொலைபேசி எண்ணை மறைக்க மற்றொரு வழி உங்கள் சாதனத்தில் உள்ள அமைப்புகளை மாற்றலாம், நீங்கள் அழைக்கும் ஒவ்வொரு அழைப்புக்கும் உங்கள் அழைப்பாளர் ஐடியை மறைக்க வேண்டும். Android மற்றும் iOS சாதனங்கள் இரண்டும் உங்கள் அழைப்பாளர் ஐடியை மறைக்க உங்களை அனுமதிக்கின்றன.

உங்கள் எண்ணை தற்காலிகமாக மீண்டும் தெரிவிக்க விரும்பினால், நீங்கள் அழைக்க விரும்பும் எண்ணுக்கு முன் *82 என்ற எண்ணை சேர்த்து டயல் செய்யுங்கள்.

உங்கள் எண்ணை மறைக்க அல்லது உங்கள் அழைப்பாளரின் ஐடியை உங்கள் தொலைபேசியின் அமைப்புகளில் மறைக்க ஒரு விருப்பத்தை கண்டுபிடிக்க முடியவில்லை எனில், அதற்கு பதிலாக உங்கள் நெட்வொர்க் வழங்குநரிடம் நேரடியாக அதை மறைக்குமாறு கேட்கலாம். நெட்வொர்க் வழங்குநர்கள் உங்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்றால், அதற்குப் பதிலாக அவர்களின் ஆப் மூலம் அதை செய்ய முயற்சிக்கலாம்..

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

யாரெல்லாம் உங்க Whatsapp DP பார்த்தார்கள் என்று தெரிந்துக்கொள்ள வேண்டுமா?

divya divya

24 மணி நேர பேட்டரி லைஃப் உடன் ஓப்போ என்கோ ஏர் வெளியீடு விரைவில்

divya divya

பல்ஸ் ஆக்சிமீட்டரைச் சரியாக பயன்படுத்துவது எப்படி?

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!