இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி; 100% ரசிகர்களுக்கு அனுமதி ; பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு!

Date:

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டி ஆகஸ்ட் மாதம் 4-ஆம் திகதி தொடங்குகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியை காண்பதற்கு 100 சதவீதம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி பிரதமர் கூறும்போது ,”இந்த போட்டிக்கு முன்பாக ஜூலை 19-ஆம் திகதியுடன் இங்கிலாந்தில்  ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என்றும், இதுகுறித்து அடுத்த வாரத்தில் முடிவெடுக்கப்படும் “என்றும் பிரதமர் விளக்கம் அளித்துள்ளார். அதேசமயம் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் அந்நாட்டு மக்களை பிரதமர் எச்சரித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்ய கோரி மீனவர்கள் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்யுமாறும் சுருக்கு வலைக்கு  உடந்தையாக...

119 குடும்பத்தினருக்குக் காணாமல் போனோர் அலுவலகத்தில் அழைப்பு: இதுவரை 11,000 பேரிடம் விசாரணை

காணாமல் போனவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 119 குடும்பத்தினர் காணாமல் போன ஆட்கள்...

கொலையாளியின் மர்ம மரணம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி கைது!

பாதாள உலகத் தலைவன் 'லொகு பட்டி' என்பவனுக்காக கூலிப்படையினராகச் செயல்பட்டதாகக் கூறப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்