நாளை சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்: வரவேற்கத் தயாராகும் ரசிகர்கள்..

Date:

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் நாளை சென்னை திரும்புகிறார்.

நடிகர் ரஜினிகாந்துக்கு சிறுநீரக பாதிப்பு தீவிரமடைந்தையடுத்து, 2016ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளினிக்கில் சிறப்பு மருத்துவர்கள் குழுவினரால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் அமெரிக்காவில் அதே மருத்துவமனையில் ரஜினி மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக அவரால் அமெரிக்கா செல்ல முடியவில்லை. அதன்பிறகு அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று குறைந்ததால் மத்திய அரசிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்று கடந்த ஜூன் 19ஆம் திகதி அன்று ரஜினி அமெரிக்கா சென்றார். அவருடன் மனைவி லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட சிலரும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் சிகிச்சை நிறைவடைந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நாளை (ஜூலை 8) அதிகாலை அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பவுள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவரை வரவேற்க அவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதால், அப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை ரஜினி சென்னை திரும்பியவுடன் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...

மட்டக்களப்பில் மனைவியின் சகோதரியை 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அத்தானுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மனைவியின் சகோதரியான 16 வயது சிறுமி...

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த மொத்தம் 11.23 ஏக்கர் காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்