தொலைக்காட்சி தொகுப்பாளர் சமுதித சமரவிக்ரமாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து, மொடல் பியுமி ஹன்சமலியை குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரித்துள்ளது.
கடந்த வாரம் சிஐடி முன் ஆஜரானதாக ஹன்சமலி கூறினார்.
நேற்று பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பில் பியுமி இதனை தெரிவித்தார்.
சமுதித சமரவிக்ரமவால் புகார் அளிக்கப்பட்டதாக பின்னர் பொலிசார் தனக்கு அழைப்பு அனுப்பியதாகவும், தான் யாருக்கும் தீங்கு செய்ய மாட்டேன் என்று கூறி குற்றச்சாட்டுகளை நிராகரித்ததாக ஹன்சமலி கூறினார்.
கொழும்பு ஷாங்க்ரி-லா ஹோட்டலில் நிகழ்வு அமைப்பாளர் சந்திமல் ஜெயசிங்கவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பலருடன் பியுமி ஹன்சமலி சமீபத்தில் தனிமைப்படுத்தப்பட்டார்.
அவர்களிற்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட போதிலும், தன்னையும் மற்றவர்களையும் தனிமைப்படுத்துமாறு ஒரு தனியார் தொலைக்காட்சி சனல் மற்றும் சமரவிக்ரம ஆகியோர் காவல்துறையைத் தூண்டியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




