பானுக ராஜபக்ஷவிற்கு ஒத்திவைக்கப்பட்ட போட்டித் தடை!

Date:

கிரிக்கெட் ஒப்பந்தத்தை மீறியமைக்காக பானுக ராஜபக்ஷவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இரண்டு வருடங்களிற்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 5,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சமூக ஊடகம் மற்றும் பிற ஊடக நேர்காணல்களில் தோன்றும் போது ஒப்பந்தத்தின் 2019/2020 இன் கடமைகளை மீறியுள்ளார் என்பது கண்டறியப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையில், எதிர்கால சுற்றுப்பயணங்களை மையமாகக் கொண்டு. தற்போது கொழும்பில் உயிர்குமிழி திட்டத்தின் கீழ் கொழும்பில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் 13 பேர் கொண்ட அணியில் பானுகவை உள்வாங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அவர் தேவையான உடற்தகுதியை நிரூபித்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அவர் நாளை உயிர் குமிழி திட்டத்தில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...

பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ்காரர் பணியிடைநீக்கம்

வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் சாவடியில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர்,...

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்