விரைவில் அமைச்சராகும் பசிலின் கீழ் வருகிறது கொழும்பு துறைமுக நகர திட்டம்!

Date:

விரைவில் பொருளாதார அபிவிருத்தி, நிதி  அமைச்சராக பதவியேற்கவுள்ள இலங்கை மக்கள் முன்னணியின் நிறுவனர் பசில் ராஜபக்ஷ, கொழும்பு துறைமுக நகர திட்டம் மற்றும் இலங்கை முதலீட்டு வாரியத்திற்கு பொறுப்பாகஇருப்பார் என அரசாங்க வட்டாரங்களை மேற்கோளிட்டு சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொழும்பு துறைமுகம் தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ளது. இலங்கை முதலீட்டு வாரியம் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ளது.

புதிய பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் கீழ், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் சாமல் ராஜபக்ஷ மற்றும் நமல் ராஜபக்ஷ ஆகியோரின் கீழ் உள்ள பல நிறுவனங்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ஷ அடுத்த வியாழக்கிழமை (08) தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார். அன்றைய தினம் அல்லது அதற்குப் பிறகு பொருளாதார அபிவிருத்தி மற்றும் நிதி அமைச்சராக பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர்...

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்