ஒரு மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசிகள் இன்று (4) அதிகாலை நாட்டை வந்தடைந்தன.
இன்று காலை 4:50 மணியளவில் இலங்கை ஏர்லைன்ஸ் விமானத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டன.
வெள்ளிக்கிழமையும் ஒரு மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு வந்தன.
இந்த வார தொடக்கத்தில் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், ஜூலை மாதத்தில் மேலும் இரண்டு மில்லியன் டோஸ் இலங்கைக்கு வர உள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



