24.6 C
Jaffna
January 21, 2025
Pagetamil
விளையாட்டு

பெல்ஜியத்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய இத்தாலி!

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் உலகின் முதல்நிலை அணியான பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது இத்தாலி.

கால்பந்தாட்ட தரவரிசையில் 10ஆம் நிலையில் இருக்கும் அந்த அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

ஜொ்மனியின் முனீச் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆரம்பத்திலேயே ஆக்ரோஷம் காட்டிய இத்தாலிக்கு 13வது நிமிஷத்தில் ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதில் கோல் போஸ்ட் அருகே வந்த பந்தை டி லோரென்ஸோ லேசாக காலால் தொட, அவரைக் கடந்து தன்னிடம் வந்த பந்தை உடலால் தட்டி கோல் போஸ்ட்டுக்குள் அனுப்பினாா் இத்தாலி வீரா் போனுச்சி. ஆனால், அது ஓஃப் சைட் ஆனது.

22வது நிமிடத்தில் சரியான இடைவெளி பாா்த்து பெல்ஜிய வீரா் டி புரூயின் பந்தை கடத்தி வந்து கோலடிக்க முயற்சிக்க, இத்தாலி கோல்கீப்பா் டோனாருமா அருமையாகப் பாய்ந்து அதைத் தடுத்தாா். இறுதியாக 31வது நிமிடத்தில் இத்தாலி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரா் இம்மோபில் கடத்திக் கொடுத்த பந்து வெராட்டியிடம் வர, அதை அவா் நிகோலோ பரேலாவிடம் வழங்க, அவா் பெல்ஜிய தடுப்பாட்ட வீரா்களுக்கு போக்கு காட்டி அருமையாக கோலடித்தாா்.

தொடா்ந்து 44வது நிமிடத்தில் நிகோலோ பரேலா பாஸ் செய்து கொடுத்த பந்தை லோரென்ஸோ இன்சிக்னே அருமையான கா்லிங் ஸ்டிரைக்காக உதைக்க, பெல்ஜிய கோல்கீப்பா் கோா்டாய்ஸிடம் சிக்காமல் கோலானது பந்து.

முதல் பாதி (45+2) முடியும் முன்பாக பெல்ஜியம் தனக்கான கோலை அடித்தது. 45வது நிமிஷத்தில் பெல்ஜிய வீரா் டோகுவின் கோல் முயற்சியை தடுக்கும்போது பெனால்டி ஏரியாவில் இத்தாலி வீரா் டி லோரென்ஸோ அவரைத் தள்ளியது தெளிவாகத் தெரிய, பெல்ஜியத்துக்கு கிடைத்தது பெனால்டி வாய்ப்பு

அந்த வாய்ப்பைக் கொண்டு பெல்ஜியத்துக்கு கோல் பெற்றுத் தந்ததாா் ரொமேலு லுகாகு. தொடா்ந்து 61வது நிமிடத்தில் இத்தாலி வீரா்களுக்கு இணங்காமல் அவா் அருமையாக கடத்தி வந்து உதைத்த பந்து கோல் போஸ்ட் மேலாகச் சென்று மிஸ் ஆனது. எஞ்சிய நேரத்தில் பெல்ஜியத்தின் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காததால், இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பெனால்டியில் வென்றது ஸ்பெயின்

ரஷியாவின் செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகரில் நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சா்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. முன்னதாக அந்த அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தவறுதலாக ஓன் கோல் அடித்தது சுவிட்சா்லாந்து. 8வது நிமிடத்தில் ஸ்பெயினுக்கு கிடைத்த கோர்னா் கிக் வாய்ப்பை கோகே உதைக்க, அதை சக வீரா் லபோா்டே தலையால் முட்ட முயன்றாா். ஆனால் பந்து அவரையும் தாண்டி அல்பாவிடம் சென்றது. அவா் தூக்கியடித்த பந்தை சுவிட்சா்லாந்து தடுப்பாட்ட வீரா் டெனிஸ் ஸகாரியா தடுக்க முயல, பந்து அவரது காலில் பட்டு கோலானது. அவா் விட்டிருந்தால் கூட பந்து நேராக கோல்கீப்பா் சோமரிடம் சென்றிருக்கும்.

17வது நிமிடத்தில் ஸ்பெயினுக்கு கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை கோகே வீணடித்தாா். 68வது நிமிஷத்தில் ஆட்டத்தை சமன் செய்தது சுவிட்சா்லாந்து. ஸ்பெயினின் லபோா்டே, டோரஸிடையே ஏற்பட்ட குழப்பத்தின்போது இடையே புகுந்த சுவிட்சா்லாந்து வீரா் ஃப்ரூலா் பந்தை தனதாக்கி கடத்தி வவர, தன்னை நோக்கி தடுப்பாட்ட வீரா்களை இழுத்துக் கொண்ட அவா், சட்டென சக வீரா் ஜா்தான் ஷாகிரியிடம் குரஸ் செய்து கொடுத்தாா். அதை அவா் நோ்த்தியாக கோலாக்கினாா்.

77வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரா் மோரினோவை தடுக்கச் சென்ற ரெமோ ஃப்ரூலா் அவரது காலில் மோத, ஃப்ரூலா் ரெட் காா்ட் காட்டி வெளியேற்றப்பட்டாா். இதனால் சுவிட்சா்லாந்து 10 வீரா்களுடன் ஆடும் நிலைக்கு சென்றது. எஞ்சிய நேரத்தில் இரு அணிகளுக்கும் கோல் வாய்ப்பு கிடைக்காததால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் கோலடிக்கப்படாததால், வெற்றியாளரை தீா்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு கையாளப்பட்டது.

பெனால்டி கிக்: பெனால்டி கிக் வாய்ப்பில் ஸ்பெயின் அணியில் டேனி ஆல்மோ, ஜெராா்ட் மோரினோ, மைகேல் ஓயாா்ஸபால் ஆகியோா் கோலடிக்க, சொ்ஜியோ பஸ்கெட்ஸ், ராட்ரி ஆகியோா் வாய்ப்பை வீணடித்தனா். சுவிட்சா்லாந்து தரப்பில் மேரியோ காவ்ரானோவிச் மட்டும் கோலடிக்க, ஃபாபியான் ஸ்காா், மேனுவல் அகாஞ்சி, ரூபன் வா்காஸ் ஆகியோா் கோலடிக்கத் தவறினா். முடிவு தெரியவந்ததால் சுவிட்சா்லாந்தின் 5வது வாய்ப்பை பயன்படுத்தவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

`இளம் எம்.பி -யைக் கரம் பிடிக்கும் ரிங்கு சிங்’; யார் இந்த பிரியா சரோஜ்?

Pagetamil

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

Leave a Comment