சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட அண்ணாத்த படத்தின் போஸ்டரில் இசையமைப்பாளர் இமான் பெயர் இடம்பெறாதது பேசுபொருள் ஆகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு டி. இமான் இசையமைத்து வருகிறார்.
01.07.2021அண்ணாத்த புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியது. அதில் ரஜினி முறுக்கு மீசை மற்றும் தாடியுடன் மிரட்டலான கெட்டப்பில் காணப்பட்டார். அந்தப் போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தனர். அந்த போஸ்டரில் தொழிநுட்பக் கலைஞர்கள் பெயர் இடம் பெற்றிருந்த வரிசையில் இமான் பெயர் இடம் பெறவில்லை.
படத்தின் இசையமைப்பாளர் பெயரே போஸ்டரில் இடம் பெறவில்லை என ரசிகர்கள் பலர் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த போஸ்ட்டரை இமான் தனது சமூக வலைத்தள பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார். இது கவனக் குறைவால் நடந்த தவறாகவே தெரிகிறது. இருப்பினும் உலகம் முழுதும் செல்லக் கூடிய பிரபல போஸ்டரை வடிவமைக்கும் போது சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். இதை கருத்தில் கொண்டு வரும் நாட்களில் அறிவிப்புகள் வெளியிடும் போது அதில் கூடுதல் கவனிப்பு செலுத்தவேண்டும் என்பதே ரசிகர்கள் விருப்பம்.
அண்ணாத்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் மாதம் 4-ம் திகதி வெளியாக உள்ளது.