இராணுவ தளபதியின் துரு மித்துரு நவ ரட்டக்’ திட்டத்தின் கீழ் விவசாய உற்பத்தியி்ல் தன்நிறைவு அடைவதை இலக்காக கொண்டு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் விவசாய பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட மிளகாய் சகாய விலையில் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரவித்துள்ளது.
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் விவசாய பண்ணை செயற்பட்டு வருவதும், இராணுவததின் பிடியிலுள்ள தமது பூர்வீக காணிகளை ஒப்படைக்குமாறு பொதுமக்கள் கோரி வருவதும் குறிப்பிடத்தக்கது.




