இனி சீனா இராணுவ சீருடை அணியக்கூடாது!

Date:

திஸ்ஸமஹாராம, ‘திஸ்ஸ வாவியை தூர் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் சீனாவின் இராணுவத்தினர் அல்ல, என்பதை சீன தூதரகம் உறுதி செய்துள்ளது.

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), கொழும்பிலுள்ள சீனா தூதரகத்திற்கு அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கையிலேயே, இதனை தூதரகம்  உறுதிப்படுத்தியுள்ளது.

எதிர்காலத்தில் சர்ச்சைக்குரிய இராணுவ பாணி சீருடைகளை அணிவதைத் தவிர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிற்கு அறிவுறுத்த பாதுகாப்பு செயலாளர் தூதரகத்திற்கு தகவல் அளித்துள்ளார், மேலும் இனிமேல் இதுபோன்ற நடவடிக்கை மீண்டும் நிகழாமல் இருக்க உள்ளூர் தனியார் நிறுவனத்திற்கும் தகவல் அளித்துள்ளார்.

இதுபோன்ற எந்தவொரு முயற்சியையும் தடுத்து நிறுத்த தெற்கு மாகாண பொறுப்பான பொலிஸ் அதிகாரிக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

திஸ்ஸமஹாராம, ‘திஸ்ஸ வாவியை தூர் வாரும் பணியில், சர்ச்சைக்குரிய இராணுவ பாணி சீருடைகளை அணிந்த சீன ஊழியர்களை கொண்ட ஒரு தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருவது ஊடக தகவல்களால் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

வீடு பிரித்து 1 கோடி 15 இலட்சம் கொள்ளையிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய்...

அனுபவமற்ற ஆட்சியால் நாடு சீரழிந்தது; நாட்டை மீட்க SJB மட்டுமே முடியும் – ஹலீம்

அனுபவமற்ற ஒரு குழுவினரின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றதன் விளைவாக நாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்