விம்பிள்டன் டென்னிஸ்; காயத்தால் முதல் சுற்றிலேயே கண்ணீருடன் வெளியேறினார் செரீனா வில்லியம்ஸ்!

Date:

காயம் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே செரீனா வில்லியம்ஸ் வெளியேறினார்.

ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஆண்டில் 3வது வருவதும், மிக உயரியதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடங்கி ஜூலை 11ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

கொரோனா அச்சத்தால் கடந்த ஆண்டு விம்பிள்டன் தொடர் இரத்து செய்யப்பட்டதால் இந்த முறை கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில், விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் 7 முறை சம்பியன் பட்டம் வென்றவரும் 23முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் காயத்தால் முதல் சுற்றிலேயே வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

பெலாரஸ் நாட்டின் அலைக்சண்ட்ரா ஸஸ்னோவிச் எதிர்த்து செரீனா வில்லியம்ஸ் விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது, டென்னிஸ் களத்தில் கால் சறுக்கியதால் இடது கணுக்காலின் காயம் ஏற்பட்டு வலியால் துடித்தார். சிறிய முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்து விளையாட முயற்சித்தார். 34 நிமிடங்கள் ஆடி 3-3 என்ற கணக்கில் இருந்த நிலையில், வலி அதிகமானதால் போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

இதனால் முதல் சுற்றிலேயே நடப்பு விம்பிள்டன் தொடரில் இருந்து செரீனா வில்லியம்ஸ் வெளியேறினார். இதன் மூலம் 8வது முறையாக விம்பிள்டன் பட்டம் வெல்லும் செரீனா வில்லியம்ஸின் கனவு தகர்ந்தது.

spot_imgspot_img

More like this
Related

இரு குழந்தைகள் பலியான மட்டு விடுதி தீ: சந்தேகநபருக்கு ஜூன் 12 வரை விளக்கமறியல்

பிள்ளைகளுக்கு பிறப்பு பதிவு இல்லை – வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்-- மட்டக்களப்பில் விடுதியில்...

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன: ட்ரம்ப்

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

தானசாலை வரிசையில் நின்றவர்களை மோதிக்கொன்ற வாகன சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு!

மீகொடவில் உள்ள வெசக் தானசாலையில் வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்