Pagetamil
உலகம்

120வது மாடியில் தங்கும் விடுதி: உலகின் மிக உயர்ந்த சொகுசு ஹோட்டல் சீனாவில் திறப்பு!

ஷாங்காய் டவர் கட்டடத்தின் 120வது மாடியில் உலகின் மிக உயர்ந்த சொகுசு ஹோட்டலை அமைத்துள்ளனர்.

துபாயின் புர்ஜ் கலீபாவுக்கு அடுத்தப்படியாக உலகின் 2வது உயரமான கட்டிடம் ஷாங்காய் நகரில் அமைந்துள்ள ஷாங்காய் டவர் ஆகும். சுமார் 2 ஆயிரம் அடிகளுக்கும் மேல் உயரம் கொண்டது. இந்த கட்டடத்தின் மேல் தளங்களில் ஜெ ஹோட்டல்ஸ் என்ற நிறுவனம் தங்கும் விடுதி, உணவு விடுதி, நீச்சல் குளம், ஸ்பா, பார் போன்றவற்றை அமைத்துள்ளது.

முன் கூட்டியே திறக்கப்பட இருந்த இந்த ஹோட்டல் கொரோனா பெருந்தொற்றால் காலதாமதமாகி தற்போது திறப்பு விழா கண்டுள்ளது. இந்த சொகுசு ஹோட்டலை சீன அரசுக்கு சொந்தமான ஜின் ஜியாங் இன்டர்நேஷனல் ஹோட்டல்ஸ் குழு அமைத்துள்ளது. முழுக்க முழுக்க வசதிப்படைத்தவர்களுக்கான ஹோட்டலாக வடிவமைத்துள்ளனர்.

திறப்பு விழா சலுகையாக ஒரு இரவு தங்க ரூ.35 ஆயிரம் என அறிவித்தனர். அதிலுள்ள பிரம்மாண்ட சூட் அறைகளுக்கு கடும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் அந்த சூட் அறைகளில் தங்க ஒரு இரவுக்கு ரூ.6.5 லட்சத்துக்கும் மேல் விலை நிர்ணயித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஹமாஸ்ஸினால் விடுவிக்கப்பட்ட 3 பணயக்கைதிகள் இஸ்ரேலில் இணைவு

east tamil

47வது அமெரிக்க ஜனாதிபதியாக பதியேற்கும் டொனால்ட் ட்ரம்ப்

east tamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

2025ம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருது விழா ரத்தாகுமா?

east tamil

கவிழ்ந்த கொள்கலனில் பெற்றோல் எடுத்த 70 பேர் எரிந்து பலி

Pagetamil

Leave a Comment