ஹக்மன – வலஸ்முல்ல பிரதான வீதியின் தெனகம பகுதியில் இன்று (25) காலை நோயாளர் காவு வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த சுகாதார ஊழியர்கள் நால்வர் காயமடைந்திருந்தனர்.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் கராபிட்டி போதனா மருத்துவமனையில் நோயாளிகளை அனுமதித்துவிட்டு, வலஸ்முல்ல ஆதார மருத்துவமனைக்கு திரும்பும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த நால்வர் வலஸ்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். சாரதி தூங்கியதால் இந்த விபத்து நேர்ந்தது.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவர்களில் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1