260 கைதிகளின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறை சீர்திருத்தம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வுத் துறை அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஏற்கெனவே நீதி அமைச்சர் மூலம் ஜனாதிபதிக்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 260 கைதிகளின் தண்டனையையே மாற்ற முயற்சிக்கிறார்கள்.
பல்வேறு குற்றங்களுக்காக 500 க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




