கொலைகார பயங்கரவாதத்தை ஆதரிப்பதை விட நாட்டை காக்கும் அரசின் காலடியை நக்குபவனாக இருக்கிறேன்: சுரேன் ராகவனிற்கு இதிலும் பெருமை வேறு!

Date:

கொலைகார பயங்கரவாதத்தை ஆதரிக்கும் கூலிப்படையாக இருப்பதை விட, இந்த நாட்டை காப்பாற்றும் அரசாங்கத்தின் காலணியை நக்கும் நாயாக இருப்பதில் பெருமையடைகிறேன் என குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன்.

பாராளுமன்றத்தில் இன்று (23) சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்த சமயத்தில் இதனை தெரிவித்தார்.

பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்ற ஆரம்பித்த சமயத்தில், 30 செக்கன்களில்ஒரு விடயத்தை குறிப்பிடப் போவதாக தெரிவித்து, தன்னை நன்றாக கற்றவர் என கூறிக்கொண்டிருக்கும் தமிழ் எம்.பி ஒருவர் (எம்.ஏ.சுமந்திரன்) இந்த சபையில் இன்று 3 முறை என்னை நாய் என கூறினார்“என கூறிய போது, சபாநாயகர் அவரை இடைமறித்து, இது தொடர்பில் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசுமாறு கூறினார்.

இதன்போது, சுரேன் ராகவன்- “ஆம், நான் அரசாங்கத்தின் காலணியை நக்கும் நாய்தான். பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் கொலைகார பயங்கரவாதத்தை ஆதரிக்கும் கூலிப்படையினராக இருப்பதை விட எனது அரசைப் பாதுகாக்க ஒரு நாயாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்” என்றார்.

ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒலியெழுப்பி பாராட்டு தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்