டெஸ்ட் சம்பியன் நியூசிலாந்து!

Date:

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் கிரிக்கெட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நடந்தது. பலத்த மழையால் முதல் நாள் ஆட்டம் ‘ரொஸ்’ கூட போடப்படாமல் கைவிடப்பட்டது. 2வது நாளில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 92.1 ஓவர்களில் 217 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமான ரஹானே 49 ஓட்டங்களை பெற்றார். நியூசிலாந்தின் கைல் ஜெமீசன் 31 ஓட்டங்களிற்கு 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை நியூசிலாந்து அணி தொடங்கியது. இடையில் வருண பகவானும் விளையாடியதால் ஆட்டத்தின் 5வது நாளில்தான் நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. முதல் இன்னிங்சில் 99.2 ஓவர்களில் 249 ரன்கள் சேர்த்து நியூசிலாந்து அணி ஆட்டமிழந்தது. டேவான் கென்வேய் 54, கேன் வில்லியம்சன் 49 ஓட்டங்களை பெற்றனர்.

இந்திய தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்தியாவின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஒரு விக்கெட்டும் கிடைக்கவில்லை.

அடுத்து 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை ஆடியது. சுப்மான் கில் 8 ரன்னில் வெளியேறினார். 5வது நாள் நிறைவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 30 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்து மொத்தம் 32 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

மழை பாதிப்பு எதிரொலியாக இந்த டெஸ்டில் மாற்று நாளாக அறிவிக்கப்பட்டிருந்த 6வது நாளான நேற்று கடைசி நாள் போட்டி நடைபெற்றது. முதல் செஷனிலேயே இந்திய அணியில் கப்டன் விராட் கோலி (13), புஜாரா (15) ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த ரகானேவும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. சிறிது நம்பிக்கை அளித்த ரிஷப் பண்டும் 41 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.

73 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  நியூசிலாந்து தரப்பில் ரிம் சவுதி 4 விக்கெட் வீழ்த்தினார்.

நியூசிலாந்து அணிக்கு 139 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. நியூசிலாந்தின் 2வது இன்னிங்சை ரொம் லாத்தம்-டேவான் கென்வேய் ஜோடி தொடங்கி வைத்தது. இவர்கள் முறையே 9 மற்றும் 19 ரன்களில் அவுட்டாகி வெளியேறினர்.

அடுத்ததாக கப்டன் கேன் வில்லியம்சன்(52 ரன்கள், 89 பந்துகள்) மற்றும் ரோஸ் டெய்லர்(47 ரன்கள், 100 பந்துகள்) இறுதி வரை நிலைத்து நின்று ஆடி 45.5 ஓவர்களில் 140 ரன்கள் என்ற ஸ்கோரை எட்டினர்.

இதன் மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டநாயகன் கைல் ஜமீசன்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 120 ஜோடிப் புறாக்கள்

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப்...

நீர்கொழும்பிலிருந்து யாழ் சிறைக்கு மாற்றப்பட்ட 60 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர்...

நீர்கொழும்பு சிறைக்குள் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது?: சிறைச்சாலை ஆணையாளர் விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) ஏற்பட்ட சம்பவத்தின் போது பாதுகாப்புப் பிரிவினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்