Pagetamil
விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி : 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி!

இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணியின் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது. வரும் ஜுன் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்கும் இந்தப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை நேரில் காண 4,000 ரசிகர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நியூசிலாந்து அணி, 22 ஆண்டுகளுக்கு இங்கிலாந்தில் தொடரை வென்ற சாதனை படைத்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய உற்சாகத்தில் நியூசிலாந்து வீரர்கள் உள்ளனர்.இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் வில்லியம்சன் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட அணியில், டாம் பிளென்டல், டிரெண்ட் போல்ட், டெவான் கான்வே, கோலின் டி கிராண்ட்ஹோம், மேட் ஹென்றி, ஹென்றி நிக்கோல்ஸ், அஜாஷ் படேல், டிம் சவுதி, ரோஸ் டெய்லர், நெய்ல் வாக்னர், வாட்லிங், வில் யங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் விரைவில்

Pagetamil

இலங்கையின் முதல் டெஸ்ட்… 1996 உலகக் கோப்பை கப்டனின் உதயம்

Pagetamil

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

Leave a Comment