ஜீ தமிழின் புதுப்புது அர்த்தங்கள் சீரியல் நடிகை VJ பவித்ரா அளித்திருக்கும் பேட்டியில் தனக்கு நடிகர் அர்ஜுன் தாஸ் மாதிரி ஒரு கணவர் வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது புதுப்புது அர்த்தங்கள் என்ற சீரியலில் நடித்து வருபவர் பார்வதி. அதில் தேவயானி, திண்டுக்கல் லியோனி , அபிஷேக் ஷங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். அதில் தேவயானியின் மருமகள் பார்வதி ரோலில் தான் பவித்ரா நடித்து வருகிறார்.
பவித்ரா சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில் இவ்வளவு அனுபவம் வாய்ந்த நடிகர்களுடன் நடிப்பது சவாலான விஷயம் தான் என்றாலும், அவர்கள் செட்டில் நன்றாக பார்த்துக்கொண்டதாக தெரிவித்து உள்ளார்,.
மேலும் சில மாதங்களுக்கு முன்பு சன் டிவியில் மாஸ்டர் பட ஸ்பெஷல் ப்ரோக்ராம் ஒன்று நடைபெற்றபோது அதை பார்வதி தான் தொகுத்து வழங்கினார். அதில் மாஸ்டர் பட வில்லன் அர்ஜுன் தாஸ் பார்வதிக்கு செம கியூட்டாகக் ப்ரொபோஸ் செய்யும் வீடியோ இணையத்தில் அதிகம் வைரல் ஆகி இருந்தது.
தற்போது பார்வதியிடம் அர்ஜுன் தாஸ் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘அர்ஜுன் தாஸ் மாதிரி ஒரு honestஆ என்னை பார்த்துக்கொள்கிற மாதிரி ஒரு ஆள் கணவராக வந்தால் நன்றாக தான் இருக்கும்’ என கூறி இருகிறார்.
ஏற்கனவே ப்ரோபோசல் வீடியோ படு வைரல் ஆன நிலையில் தற்போது பார்வதி பேசி இருப்பதும் வைரலாகி உள்ளது.