நடிகர் விஷ்ணு விஷால் ரஜினியின் ஆருயிர் நண்பரான நடராஜின் முன்னாள் மருமகன் ஆவார். பிரபல Tennis வீராங்கனை ஜுவாலா அவரோடு இருக்கும் நெருக்கத்தினால் ரஜினி என்கிற தன் மனைவியை விவாகரத்து செய்து புதிய காதலியோடு Dating , Chatting என்று ஜாலியாக பொழுதை கழித்துகொண்டிருந்தார்.
இவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது, அவரின் பெயர் ஆர்யன் என்பது அனைவருக்கும் தெரியும். இவரின் நீண்ட நாள் காதலி பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை ஒரு மாதத்திற்கு முன் நெருங்கிய நண்பர்கள், சொந்த பந்தங்களுக்கு மத்தியில் திருமணம் செய்தார்.இந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்பிதான், அவரது முன்னாள் மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார் விஷ்ணு விஷால் என்பது ஒரு வதந்தி இருக்கிறது.
இந்நிலையில் விஷ்ணு விஷாலின் முதுகில் பல்லாங்குழி விளையாடுவது போல வட்ட வட்டமாக காயங்கள் இருப்பதை பார்த்த ரசிகர்கள் ஷாக் அடைந்தனர். அதிலும் ஒரு சிலரோ “என்ன தல ஐ விக்ரம் மாதிரி ஆயிட்ட… ?” “என்னய்யா முதுகுல பணியாரம் சுட்டு இருக்காங்க” என்று கமன்ட் செய்து உள்ளனர். ஆனால், உண்மையில் இது Cupping (கப்பிங்) எனப்படும் ஒரு விதமான சிகிச்சை.
இந்த சிகிச்சை எகிப்தில் மிகவும் பிரபலம். இந்த சிகிச்சை மூலம் உடலில் உள்ள கரும் பித்தத்தை எடுக்கின்றனர். நம் உடலில் நான்கு வகையான திரவங்கள் உள்ளன. அவை ரத்தம், சளி, மஞ்சள் பித்தம், கரும் பித்தம். இதில் கரும் பித்தம் தான் நச்சுத்தன்மை உடையது. இதை எடுக்கத்தான் கப்பிங் தெரபி செய்கிறார்கள்.