இலங்கையில் பதிவான மேலும் 67 கொரோனா மரணங்கள் நேற்று (10) அறிவிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் நாளொன்றில் அறிவிக்கப்பட்ட அதிகபட்ச மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.
நாட்டில் இதவரை பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,910 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களில் 3 பேர் 30 வயதிற்கும் குறைவானவர்கள்.
கொழும்பு 15, வத்தளை, வெல்லம்பிட்டி, அவிசாவளை, நீர்கொழும்பு, வாழைச்சேனை,, கொழும்பு 14, கொட்டஹேன, துலங்கடவல, மீகாம, வெலிசர, பண்டாரகம, காலி, பூஜாபிட்டி, கம்பளை, தெனியாய, பொகவந்தலாவ, பரகடுவ, தெடிகமுவ, வெல்லவாய, அம்பேபுஸ்ஸ, ஹேமதகம, கணேமுல்லா கோனவல, ஏகல, பரந்தன், கரந்தெனிய, மொரட்டுவா, வாதுவ,
மடபத, அலுபோமுல்ல, பிலியந்தல, மாத்தளை, ஏறாவூர், வத்தேகம, பலாங்கொட, களனி,
ஹோமாகம, கட்டுநேரிய, கம்பஹா, புஸ்ஸல்லாவ, வெலம்பட, கெங்கல்ல, கட்டுகஸ்தோட்ட, கண்டி, கொழும்பு 7, நுவடிரலியா, கலகெதர, களுத்துறை, கொழும்பு 10, அம்பாறை, பசறை, மாத்தறை, மரவில, களுத்துறை தெற்கு, தெஹிவளை மற்றும் ஜின்தோட்ட பகுதிகளை சேர்ந்தவர்களே உயிரிழந்தனர்.
24 பெண்களும், 43 ஆண்களும் உயிரிழந்தனர்.