26 C
Jaffna
January 28, 2025
Pagetamil
உலகம்

உலகில் விலை உயர்ந்த டீ எது தெரியுமா!

உலகில் மிகவும் விலை உயர்ந்த டீயாக பார்க்கப்படுவது டா ஹோங் போ எனப்படும் சீன நாட்டில் பயிரடப்படும் டீயாகும். இந்த தேயிலைகள் தான் உலகில் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதை விலை என்ன என உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? கேட்டால் மலைத்துப்போவீர்கள் இந்த டீ ஒரு கிலோ ரூ9க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த டீ சீனாவின் ஃபுஜைன் அருகே உள்ள உய்ஷன் என்ற பகுதியில் பயிர் செய்யப்படுகிறது. இந்த டீயில் பல நன்மைகள் செய்யும் சத்துக்கள் இருக்கிறது. இந்த டீயில் என்ன சத்துக்கள் இருக்கிறது என்பது பலரும் அறியாத ரகசியமாக உள்ளது.ஆனால் உடலுக்கு நன்மை பயக்கும் அதே நேரத்தில் உயிரை காக்கும் தன்மை கொண்டது இந்த டீ. அதனாலேயே இதை உயிர் கொடுக்கும் டீ எனவும் அந்நாட்டில் அழைக்கிறார்கள்.

இந்த டீயை அருந்துபவர்களுக்கு பல்வேறு விதமான வியாதிகள் குணமாவதாக கருதப்படுகிறது. இந்த ரக டா ஹோங் போ ரக டீ மிகக்குறைந்த அளவிலேயே பயிர் செய்யப்படுகிறது. அதனாலேயே இந்த டீ உலகில் மிகவும் அரிதான பொருளாக இருக்கிறது. அதனாலேயே இந்த டீ ஒரு கிலோ ரூ9 கோடிக்கு விற்பனையாகிறது. இந்த டீ பயிர் செய்வதில் பல சிறப்பான விஷயங்கள் உள்ளது அதற்கு கடின உழைப்பும் தீவிர கவனமும் தேவைப்படுகிறது.

​வரலாறு

சீனாவின் மிங் ஆட்சி காலத்தில் இந்த டா ஹோங் போ டீ பயிர் செய்யப்பட்டுள்ளதற்கான சாட்சிகள் உள்ளன. மிங் ஆட்சி காலத்தில் ஆட்சி செய்த ராணி ஒருவர் திடீரென உடல் நிலை மோசமான நிலைக்கு சென்றுவிட்டார். ராணியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக சென்றது அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பும் குறைவாகவே இருந்தது. ராணிக்கு எல்லாவிதமான மருந்து கொடுத்து எந்த மருந்தும் ராணிக்கு பலனை தரவில்லை.

இந்நிலையில் தன் கடைசி கால ஆசைகளில் ராணி தனக்கு டா ஹோங் போ டீ பருக வேண்டும் என கூறியுள்ளார். அதன் படி அவருக்கு அந்த டீ ரெகுலராக கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பின் ராணி மரணப்படுக்கையில் இருந்து மீண்டு விட்டார். அவர் மரணப்படுக்கையிலிருந்து மீண்டதும் மகிழ்ச்சியடைந்த ராஜா அந்நாட்டில் அந்த ரக டீயை தொடர்ந்து பயிர் செய்ய உத்தரவிட்டார். அந்த ராஜா தான் இந்த டீக்கு டா ஹோங் போ என பெயரிட்டார்.

​அதுதான் அந்த டீ தொடர்ந்துபயிர் செய்வதற்கான துவக்கமாக கருதப்படுகிறது முன்னாதாக சிலர் இந்த ரக டீயை பயிர் செய்து வந்துள்ளனர். ஆனால் டீ பயிர் செய்ய கடின உழைப்பும் அதிக கவனமும் தேவைப்பட்டதால் அந்த ரக டீ வீண் என கருதினர். அப்படி ஒரு முறை அந்த ராணி இந்த டீயை பருகியதால் அதன் சுவையை மரணிக்கும் தருவாயில் ருசிக்க அதை கேட்டுள்ளார். அவர் கேட்ட காலம் அந்த டீ பயிர் செய்வதை நிறுத்தி விடலாம் என விவசாயிகள் நினைத்திருந்த காலம்.

இன்று அந்த ரக டீ அந்த குறிப்பிட்ட மலைப் பகுதியை தவிர வேறு எங்கும் பயிர் செய்ய முடியவில்லை அதனால் தான் இந்த டீக்கு மிக அதிக விலை இருக்கிறது. அதனால் தான் உலகிலேயே மிக அதிக விலையில் விற்பனை செய்யப்படும் டீயாக இந்த டீ இருக்கிறது. இன்றும் இந்த ரக டீயின் சில கிராம்களை பல லட்சம் கொடுத்து வாங்குகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நைஜீரியாவில் பெற்றோல் தீப்பற்றி வெடித்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு

east tamil

சூடானில் மருத்துவமனை மீது டிரோன் தாக்குதல் : 70 பேர் பலி

east tamil

சீனாவில் செயற்கை சூரியன் பரிசோதனை வெற்றி

east tamil

ரஷ்யாவில் மாபெரும் ட்ரோன் தாக்குதல்

east tamil

நேபாளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்தியர்

east tamil

Leave a Comment