இயற்கை பசளை உற்பத்தி, விவசாய செய்கையை பார்வையிட்ட மன்னார் அரச அதிபர்!

Date:

நாட்டில் உள்ள விவசாயிகள் தமது தோட்டம் மற்றும் விவசாய செய்கைகளை இயற்கை பசளையூடாக விவசாய செய்கைகளை மேற்கொள்ள ஊக்குவிக்க உரிய திணக்களங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேசச்செயலாளர் பிரிவில் இயற்கை உற்பத்தி பசளையினை மேற்கொள்ளும் இடம் மற்றும் இயற்கை பசளையூடாக மேற்கொள்ளும் பயிர்ச் செய்கையினையும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் இன்று புதன் கிழமை (9) காலை 9.30 மணியளவில் நேரடியாக சென்று பார்வையிட்டார்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருடன் கமநல சேவை உதவி ஆணையாளர், விவசாய பணிப்பாளர், மன்னார் நகர சபையின் செயலாளர், மாவட்ட விவசாய உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

முதலில் மன்னார் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் கழிவுகளைக் கொண்டு தயாரிக்கும் இயற்கை பசளை தயாரிப்பு முறைகளை நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

மன்னார் நகர சபை பிரிவில் சேகரிக்கப்படுகின்ற கழிவுப் பொருட்கள் தரம் பிரிக்கப்பட்டு கூட்டுப்பசளை தயாரிக்கப்பட்டு வருகின்றது.

மாதம் 8 ஆயிரம் கிலோ இயற்கை பசளை தாயரிப்பதோடு,விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

குறித்த பசளையை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டதோடு, குறித்த பசளையின் சரியான தரத்தினை பரிசோதனை செய்ய அனுப்பி வைக்க உள்ளதாக அரசாங்க அதிபர் திருமதி.ஏ.ஸ்ரான்லி டி மெல் தெரிவித்தார்.

குறித்த பசளையில் குறைபாடுகள் எவையும் காணப்பட்டால் அவற்றை நிவர்த்தி செய்து தரமான பசளையை மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கும்,ஏனைய மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மன்னார் கரிசல் பகுதியில் இயற்கை முறையிலான பசளையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தோட்டச் செய்கையையும் அரசாங்க அதிபர் சென்று பார்வையிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

ஓமானிலிருந்து ‘தூக்கி வரப்பட்ட’ பிரபல குண்டர் தலைவன்!

மட்டக்குளியில் பல கொலைகள் மற்றும் கொலை முயற்சிகளில் ஈடுபட்ட, குறிப்பாக சஞ்சீவ...

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்