ரஷீத் கானுக்கு வாத்தி கம்மிங் ஒத்து, ஆனால் நம்ம ஜடேஜாவுக்கு பிடிச்ச தமிழ் பாட்டு எது தெரியுமா?

Date:

உலகம் முழுவதும் விஜய் நடிப்பில், அனிருத் இசையில் வெளியான, மாஸ்டர் படத்தில் இருக்கும் “வாத்தி கம்மிங் ஒத்து” பாடலுக்கு ஆடாத நபர்களே இல்லை என்று கூறலாம். பல பொதுமக்கள், திரைப்பிரபலங்கள் எல்லோரும் விரும்பிய இந்த பாடல் பல கிரிக்கெட் வீரர்களுக்கும் ஃபேவரட். சில தினங்களுக்கு முன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அணியின் பந்துவீச்சாளர் ரசித்தான் தனக்கு பிடித்த பாடல் வாத்தி கம்மிங் ஒத்து என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஜடேஜாவிற்கு மிகவும் பிடித்த தமிழ் பாடல் என்ன என்பது பற்றி, அஸ்வின் தனது யூ டியூப் சேனலில் தெரிவித்துள்ளார். தனது வீடியோவில், “நான் எப்போதும் ஜிம்மிற்கு போகும் போது தமிழ் பாடல்களை அதிகம் கேட்பேன். சமீபத்தில், ஜடேஜாவை ஜிம்மில் நான் சந்தித்த போது, எனது பிளே லிஸ்ட்டை பார்த்த அவர், விஜயகாந்த் நடிப்பில் வானத்தைப் போல படத்தில் வரும் ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ பாடல் தான் அது. அதன் பிறகு, அந்த திரைப்படம் பற்றியான தகவலை ஜடேஜா, என்னிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்” என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, ஜடஜாவுக்கு பிடித்த தமிழ் படம் தெறி என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாணத்தில் புதிதாக அனுமதிக்கப்பட்ட நான்கு மதுபானசாலைகளின் அனுமதிகளை ரத்துச் செய்யக் கோரி வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினர் போராட்டம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக அனுமதியளிக்கப்பட்ட நான்கு மதுபானசாலைகளின் அனுமதிகளை ரத்துச் செய்யுமாறு...

சிறைகளில் மதத் தலைவர்களின் நிலைகண்டு வெம்பியிருக்கிறேன் – அநுர ஜனாதிபதிக்கு நினைவுபடுத்திய டக்ளஸ்

அனைத்து மதங்களின் தலைவர்களும் சிறைச்சாலைகளில் கௌரவமாக நடாத்தப்படுவதை சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்த...

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டமை சகோதரத்துவ நம்பிக்கையை வலுப்படுத்துகிறது – காரைதீவு தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்