சிங்கங்களுக்கு கொரோனா தொற்று : முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு!

Date:

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகிa நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் பிரபலமான உயிரியல் பூங்காக்களில் முக்கிய பூங்காவாக வண்டலூர் உயிரியல் பூங்கா திகழ்ந்து வருகிறது. இந்த பூங்காவில் சிங்கம், புலி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, நேற்று வண்டலூர் பூங்காவில் இருந்த சிங்கம் ஒன்று உயிரிழந்தது. மற்ற சிங்கங்களுக்கு பசியின்மை மற்றும் சளி உள்ளிட்ட தொந்தரவுகள் இருப்பதால், கொரோனாவால் சிங்கம் உயிரிழந்திருக்கலாம் என பூங்கா ஊழியர்கள் அச்சப்பட்டனர். இதனால், சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் மொத்தம் உள்ள 11 சிங்கங்களில் 9 சிங்கங்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. பூங்காக்களில் சிங்கங்கள் நெருக்கமாக இருப்பதால், தொற்று பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதனிடையே, சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பரவியது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் ஸ்டாலின ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சிங்கங்களின் உடல்நிலை தொடர்பாக அங்குள்ள நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

 

spot_imgspot_img

More like this
Related

நாளை சில பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில்

முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நாளை...

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி மறைவு

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது...

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு: லண்டன் கூட்டாளிக்கு பிடிவிறாந்து!

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்