ஜீன்ஸ் மற்றும் டீ சர்ட் போன்றவற்றை ஊழியர்கள் அலுவலகத்தில் அணிய சிபிஐ தடை விதித்துள்ளது.
சிபிஐ ஊழியர்கள் சீருடை அணிவது கிடையாது. அவர்கள் சாதாரணமாக உள்ள ஆடைகளை அணிந்து பணி புரிவது வழக்கமாகும். பலரும் ஜீன்ஸ், டி சர்ட் போன்ற கேஷுவல் உடைகளை அணிந்து அலுவலகத்துக்கு வருவது வழக்கமான ஒன்றாகும். ஒரு சிலர் ஸ்டைலாக தாடி வளர்ப்பதும் உண்டு.
சில தினங்களுக்கு முன்பு சிபிஐ புடிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் பதவி ஏற்றார். அப்போது முதல் அவர் பல நிர்வாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக அவர் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உடை கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்.
அதன்படி ஆண் அதிகாரிகள் முறையான அதாவது ஃபார்மல் உடைகளை அணிய வேண்டும். சாதாரண பேண்ட் சட்டை மற்றும் ஷூ மட்டுமே அணிய வேண்டும். அவசியம் ஷேவ் செய்திருக்க வேண்டும். பெண்கள் புடவை அல்லது சாதாரண பேண்ட் சட்டை அணியலாம்.
இரு பாலரும் கண்டிப்பாக ஜீன்ஸ் மற்றும் டீ சர்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ, செருப்பு அணிந்து அலுவலகத்துக்கு வரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.