பேமிலி மேன் வெப் சீரிஸின் இரண்டாம் பாகம்; சேரன் எதிர்ப்பு!

Date:

பேமிலி மேன் வெப் சீரிஸுக்கு இயக்குனர் சேரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் தி பேமிலி மேன் வெப் சீரிஸின் இரண்டாம் பாகம் அமேசான் பிரைமில் வெளியானது. இந்த சீரிஸில் ஈழத் தமிழர்களையும் அவர்களின் போராட்டத்தையும் தவறாகச் சித்தரித்துள்ளதாகப் பலர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஈழத் தமிழர்கள் ஐஎஸ்ஐ தீவிரவாதிகளுடன் இணைந்து சதி செய்வது போலவும் காண்பித்துள்ளனர். இது ஈழப் போராட்டம் குறித்த பார்வையை மாற்றிவிடும் என்று பலர் தெரிவிப்பதுடன் சீரிஸை தடை செய்யவும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி “எம் தமிழர் வரலாற்றை திரித்து எடுப்பதில் என்ன இலாபமடா உங்களுக்கு??” என்றவாறு கேள்வி எழுப்பியிருந்தார்.

தற்போது இயக்குனர் சேரன் பேமிலி மேன் வெப் சீரிஸுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார். “தமிழ் இனத்தின் விடுதலைக்கு போராடிய இயக்கத்தின் வரலாறை கொச்சைப்படுத்தி தவறாக சித்தரிக்கும் இந்த வெப்தொடரை புறக்கணிக்கிறேன். இந்த தொடரை உடனே நிறுத்தவும். நிறுத்தும்வரை அமேசான் ஃபிரைம் சந்தாதாரராக இருக்கவோ இணையவோ போவதில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் நாடளாவிய மின்வெட்டு! மின்சார விநியோகத்தை மீளமைக்கும் பணிகள் தீவிரம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (17) மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய...

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்