போக்குவரத்து தடைகள் இருந்தபோதிலும் கடந்த 24 மணி நேரத்தில் ஆறு அபாயகரமான விபத்துக்களில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.
பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட ஒரு நாளில் அதிக எண்ணிக்கையிலான விபத்துக்கள் பதிவாகியுள்ளன என்றார்.
போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், வீதி விபத்துக்கள் அதிகரிப்பது கவலைக்குரியது என்றும் பொதுமக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.




