கொரோனா வார்டில் ஜன்னல் வழியே தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் : காப்பாற்றிய பணியாளர்கள்!

Date:

விசாகப்பட்டினம் கொரோனா வைரஸ் தொற்று மருத்துவமனையில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை தக்க சமயத்தில் ஓடி வந்து மருத்துவமனை ஊழியர்கள் காப்பாற்றினர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கொரோனா வைரஸ் தொற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் திடீரென எழுந்து சென்று அருகில் உள்ள ஜன்னலுக்கு பக்கத்திற்கு சென்று கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றார்.

இதனை கவனித்த அங்கு பணியில் இருந்த மருத்துவமனை ஊழியர்கள் ஓடி வந்து அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர். தொடர்ந்து பெண்ணிற்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பொதுமக்களை காக்க தங்களது உயிரை பணயம் வைத்து இரவு பகலாக உழைத்து வரும் நிலையில் இளம்பெண்ணை சக பணியாளர்கள் காப்பாற்றிய சம்பவம் பாராட்டுக்களை பெற்றுவருகிறது.

spot_imgspot_img

More like this
Related

FIFA WC 2026 | பிரான்ஸை துவம்சம் செய்து வெண்கலம் வென்றது இங்கிலாந்து!

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், பிரான்ஸ்...

‘இதுதான் வாழ்க்கை’: குழந்தை யமாலுடன் எடுத்த புகைப்படம் பற்றி மெஸ்ஸி விளக்கம்!

அர்ஜென்டினா கப்டன் லயோனல் மெஸ்ஸி, யமால் குழந்தையாக இருந்தபோது இருவரும் ஒன்றாகப்...

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்