லெமூர் ரக குரங்கு டான்ஸ் ஆடும் வீடியோ வைரல்!

Date:

அரிய வகை குரங்கான லெமூர் ரக குரங்கு டான்ஸ் ஆடிக்கொண்டே செல்லும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வீட்டில் சிறுவர்கள் சேட்டை செய்யும் போது பெரியவர்கள் குரங்கு சேட்டை செய்யாதே என திட்டுவது வழக்கம். அது என்ன குரங்கு சேட்டை என்றால் குரங்குகள் ஒரு இடத்தில் அமைதியாக இருக்காது சேட்டை செய்து கொண்டே இருக்கும் அதன் சேட்டைகள் பார்க்க அழகாகவும் இருக்கும். சில நேரங்களில் அது நம் பொருட்களை சேதப்படுத்தும் போது தான் நமக்கு கோவம் வரும்

குரங்கு என்றால் அதில் வகை குரங்குகள் உள்ளன. சிங்கவால் குரங்கு, உராங்குட்டான், கொரில்லா குரங்கு, என குரங்குகள் பல வகைகளாக உள்ளன. இப்படி ஒரு வகையான குரங்கு தான் லெமூர் வகை குரங்கு, இந்த வகை குரங்கு பெரும்பாலும் ஆப்ரிக்கா பகுதியில் உள்ள மடகாஸ்கர் என்ற இடத்தில் அதிகம் காணப்படுகிறது. தற்போது இந்த லெமூர் வகை குரங்கு ஒன்று டான்ஸ் ஆடும் வீடியோ தான் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Chester Zoo எனும் வன விலங்குகளை பாதுகாக்கும் அமைப்பு ஒன்று லண்டனில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் லெமூர் ரக குரங்கில் சைபாகஸ் என்ற வகையான குரங்கு டான்ஸ் ஆடிக்கொண்டே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் பண்பு கொண்டது. இந்த குரங்கின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

பலர் டான்ஸ் ஆடும் இந்த குரங்கை பார்த்து க்யூட் லெமூர் என கருத்திட்டு, இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இந்த வகை லெமூர் குரங்குகள் தற்போது அழிந்து வரும் உயிரினங்களாக உள்ளன. கடந்த 30 ஆண்டுகளில் உலகில் உள்ள ஒட்டு மொத்த லெமூர் குரங்குகளில் 80 சதவீத குரங்குகள் இறந்துவிட்டன. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் 100 லெமூர் குரங்குகள் இருந்த இடத்தில் தற்போது 20 லெமூர் குரங்குகள் தான் இருக்கின்றன. தற்போது மடகாஸ்கர் அரசு இந்த குரங்களை காப்பாற்ற பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

TGTE’s Tamil Olympics – News

தமிழ் ஒலிம்பிக் 2027 திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்தது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்! நாடுகடந்த...

ஓமானிலிருந்து ‘தூக்கி வரப்பட்ட’ பிரபல குண்டர் தலைவன்!

மட்டக்குளியில் பல கொலைகள் மற்றும் கொலை முயற்சிகளில் ஈடுபட்ட, குறிப்பாக சஞ்சீவ...

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்