ஜெயலலிதா கொடுத்த பெண் சிங்கம்தான் covid-19னால் பலியானது!

Date:

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 13 சிங்கங்களுக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டுள்ளது. இதையடுத்து விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

பரிசோதனை முடிவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருந்தது தெரிய வந்துள்ளது. அதில் நிலா என்ற 9 வயது பெண் சிங்கம் சிகிச்சை பலனளிக்காமல் கொரோனா பாதிப்பு காரணமாக 3ஆம் திகதி உயிரிழந்துள்ளது.

இதேபோன்ற இறப்பு நாட்டில் உள்ள பல்வேறு வன உயிரியல் பூங்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருந்தனர்.

இதற்கிடையே உயிரிழந்த 9 வயது பெண் சிங்கம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குப் பெற்றுத்தந்தது இப்போது தெரியவந்ததுள்ளது. ஜெயலலிதாதான் குறிப்பிட்ட பெண் சிங்கத்திற்கு நிலா எனப் பெயர் சூட்டியுள்ளார்.

இந்த பெண் சிங்கம் கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி பெண் குட்டி ஒன்றை ஈன்றது. அந்த குட்டிக்கு அப்போதைய தமிழ்நாட்டு முதல்வர் பழனிசாமி ஜெயா எனப் பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்