24.8 C
Jaffna
December 17, 2024
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

80 மில்லியன் தடுப்பூசியை உலகுடன் பகிர்ந்து கொள்ளும் அமெரிக்கா: இலங்கைக்கும் கிடைக்கும்!

அமெரிக்கா கோவிட் -19 தடுப்பூசிகளை உலகின் பிற பகுதிகளுடன் பகிர்ந்து கொள்ள ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. 80 மில்லியன் தடுப்பூசிகள் விநியோகிக்கும் திட்டத்தில், ஜூன் இறுதிக்குள் குறைந்தது 25 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது.

இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவுகள், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், பப்புவா நியூ கினியா, தைவான் மற்றும் பசிபிக் தீவுகள் என ஆசியா நாடுகளிற்கு ஏறக்குறைய ஏழு மில்லியன் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும்.

ஆபிரிக்க யூனியனுடன் ஒருங்கிணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபிரிக்க நாடுகளுக்கு  சுமார் 5 மில்லியன் தடுப்பூசிகள் அனுப்பப்படும்.

இந்த திட்டத்தில் 75% தடுப்பூசிகள், கோவாக்ஸ் எனப்படும் உலகளாவிய தடுப்பூசி திட்டத்துடன் பகிரப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 25% தடுப்பூசிகள் தேவைப்படும் நாடுகளுடன் நேரடியாக பகிரப்படும்.

சுமார் 6 மில்லியன் தடுப்பூசிகள் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவிற்கு அனுப்பப்படும். குறிப்பாக பிரேசில், அர்ஜென்டினா, கொலம்பியா, கோஸ்டாரிகா, பெரு, ஈக்வடோர், பராகுவே, பொலிவியா, குவாத்தமாலா, எல் சால்வடோர், ஹோண்டுராஸ், பனாமா, ஹைட்டி மற்றும் பிற கரீபியன் சமூக நாடுகள் மற்றும் டொமினிகன் குடியரசுகளிற்கு அவை பகிரப்படும்.

6 மில்லியன் தடுப்பூசிகள் மெக்சிகோ, கனடா, கொரியா குடியரசு, மேற்குக் கரை மற்றும் காசா, உக்ரைனுக்கு அனுப்பப்படும். , கொசோவோ, ஹைட்டி, ஜோர்ஜியா, எகிப்து, ஜோர்டான், ஈராக் மற்றும் ஏமன், மற்றும் ஐக்கிய நாடுகளின் முன்னணி பணியாளர்களுக்கு தடுப்பூசி போட பயன்படுத்தப்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன தெரிவு!

Pagetamil

‘ரஷ்யாவிற்கு சென்றது திட்டமிட்ட நிகழ்ச்சியல்ல’: சிரிய முன்னாள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்

Pagetamil

மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு : இந்தியா – இலங்கை கூட்டறிக்கை

Pagetamil

நரேந்திர மோடி- அனுர சந்திப்பு!

Pagetamil

420Kg நபரின் இறுதிச்சடங்கிற்கு உதவிய தீயணைப்புத்துறை!

Pagetamil

Leave a Comment