வவுனியா மருக்காரம்பளை அரசன்குளம் குளத்தில் மூழ்கி 16 வயது சிறுவன் பலியாகியுள்ளான்.
மீன் பிடிப்பதற்காக நண்பர்களுடன் சென்று குளத்தில் நீந்தியபோதே சிறுவன் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருக்காரம்பளையை சேர்ந்த ஜெயக்குமார் அரசபண்டார என்ற சிறுவனே இவ்வாறு பலியாகியுள்ளான்.
சடலம் அயலவர்களால் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1