27.6 C
Jaffna
January 28, 2025
Pagetamil
உலகம்

உலகின் மிகப்பெரிய தீவில் சாக்லேட் தவளை கண்டுபிடிப்பு; வைரல் புகைப்படம்!

உலகின் இரண்டாவது மிகப்பெரிய தீவான பாப்புவா நியூ குனியாவில் சாக்லேட் நிறத்தில் தவளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதன் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியா அருகே பாப்புவா நியூ குனியா என்ற தீவு இருக்கிறது.இது தான் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய தீவாகும். இந்த தீவின் பெரும்பகுதி காடுகளால் ஆனது. இந்த தீவில் பல வித விதமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் இந்த தீவில் சாக்லேட் நிறத்தில் தவளை ஒன்றை கண்டு பிடித்துள்ளனர். பொதுவாக வளை பச்சை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும், ஆனால் இப்படி சாக்லேட் தோள் கொண்ட தவளை மிக அரிய வகை தவளையாகும்.

இந்த சாக்லேட் தவளையை பார்த்தவர்கள் அதை புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை குயின்ஸ்லாந்து மியூசியத்தில் ஒரு கூட்டத்தை நடத்தியது.

அதில் இந்த தவலை ஆஸ்திரேலிய ஜர்னர் என்ன உயிரினங்களுக்கான புத்தகத்தில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த வகையை பார்த்தவர்கள் அதை பதிவு செய்து வைத்திருந்தனர். அதன் பின் இது மனிதர்கள் கண்ணில் படாமலேயே பல ஆண்டுகளாக இருந்துள்ளது. தற்போது தான் மீண்டும் மனிதர்கள் கண்ணில் பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறான தவளைகள் மிக அடர்ந்து மலைக்காடுகளில்தான் வாழும். அந்த தவளை அதை விட்டு மனித நடமாட்டம் உள்ள பகுதிக்கு வருவது மிகவும் அரிது என குறிப்பிட்டனர். இந்த தவளைக்கு Litoria Mira என்ற அறிவியல் பெயரை விஞ்ஞானிகள் வைத்தாலும் மக்கள் சாக்லேட் தவளை என்றே அழைக்கின்றனர்.

நம்ம ஊரு பெண்கள் விருப்பி சாப்பிடும் சாக்லேட் போன்ற கலரில் உள்ள இந்த தவளையை பார்த்தால் உங்களுக்கு என் தோன்றுகிறது என கமெண்டில் சொல்லுங்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடுவிக்கப்படவிருந்த 8 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உயிரிழப்பு

east tamil

நைஜீரியாவில் பெற்றோல் தீப்பற்றி வெடித்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு

east tamil

சூடானில் மருத்துவமனை மீது டிரோன் தாக்குதல் : 70 பேர் பலி

east tamil

சீனாவில் செயற்கை சூரியன் பரிசோதனை வெற்றி

east tamil

ரஷ்யாவில் மாபெரும் ட்ரோன் தாக்குதல்

east tamil

Leave a Comment