26.4 C
Jaffna
March 29, 2024
உலகம்

உகண்டாவில் மந்திரியை கொல்ல நடந்த சதியில் அவரது மகள் பலி!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகண்டாவில் அதிபர் யோவேரி முசவேனி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவரது மந்திரிசபையில் தொழில் மற்றும் போக்குவரத்து துறை மந்திரியாக இருந்து வருபவர் கட்டும்பா வாமலா.

முன்னாள் ராணுவ தளபதியான இவர் கடந்த 2019-ம் ஆண்டு மந்திரியாக பொறுப்பேற்றார்.இந்த நிலையில் 64 வயதான மந்திரி கட்டும்பா வாமலா நேற்று தலைநகர் கம்பாலாவில் உள்ள புறநகர் பகுதியில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரில் அவரது இளம்வயது மகள் நாந்தோங்கோ உடன் இருந்தார்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் மர்ம நபர்கள் சிலர் மந்திரி கட்டும்பா வாமலாவின் கார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் அவரது மகள் நாந்தோங்கோ மற்றும் கார் டிரைவர் ஆகியோரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இதில் அவர்கள் இருவரும் காருக்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர். அதே சமயம் மந்திரி கட்டும்பா வாமலா காயங்களுடன் உயிர் தப்பினார்.

அவர் தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

உகாண்டாவில் மந்திரியை கொலை செய்ய நடந்த சதியில் அவரது இளம்வயது மகள் கொல்லப்பட்டது நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment